தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Jan 2022 5:08 PM GMT (Updated: 29 Jan 2022 5:08 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

மின்கம்பம் மாற்றப்பட்டது
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவில் எப்.14 எண் கொண்ட மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
 நாகர்கோவில் கோர்ட்டின் பின்புறம் முத்தமிழ் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் நிறைந்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை சுத்தம் செய்து, கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                           -தமிழரசு, ஆரல்வாய்மொழி
நடவடிக்கை தேவை
நாகர்கோவிலில் இருந்து பறக்கை செல்லும் வழியில்  கன்னங்குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாய்கிறது. மேலும் குளத்தின் கரையில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.                        
-ஞாழல் மலர், பாத்திமாநகர், பறக்கை. 
சேதமடைந்த கழிவறை
களியக்காவிளை பஸ் நிலையத்துக்குள் கழிவறை உள்ளது. இந்த கழிவறை பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவறை ே்சதமடைந்து காணப்படுகிறது. எனவே கழிவறையை பராமரித்து, சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  -கோ.வெற்றிவேந்தன்,
 வெள்ளமடம்.
சீரான குடிநீர் தேவை
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் வணிகர் வடக்கு தெருவில் உள்ள வீடுகளுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
             -எம்.அய்யப்பன், வணிகர் வடக்குதெரு, 
கோட்டார்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இளங்கடை பட்டாரியர் சாஸ்தா நகர் பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் மண் நிறைந்து கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் சாக்கடை தெருவில் பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையில் கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுப்பார்களா?
                                     -சிவகுமார், இளங்கடை.
குளத்தை தூர்வார வேண்டும்
பாகோடு பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு பகுதியில் தேவர்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். குளம் முறையாக பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் ஆக்கிரமித்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே குளத்ைத தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                -அருள் பிரைட், பாகோடு.

Next Story