தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 29 Jan 2022 10:45 PM IST (Updated: 29 Jan 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஆற்காடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந்  தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாரிடம் நகராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எத்தனை பேர் உள்ளனர். எத்தனை வார்டுகள் உள்ளன.

 இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதா மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
1 More update

Next Story