நாளை, அக்னிதீர்த்த கடலில் புனித நீராட அனுமதி


நாளை, அக்னிதீர்த்த கடலில்  புனித நீராட அனுமதி
x
தினத்தந்தி 29 Jan 2022 5:51 PM GMT (Updated: 29 Jan 2022 5:51 PM GMT)

தை அமாவாசையான நாளை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகி்ன்றன..

ராமேசுவரம், 
தை அமாவாசையான நாளை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகி்ன்றன..
தை அமாவாசை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதன் எதிரொலியாக அனைத்து கோவில்களிலும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுபோல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து, ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
வருவது வழக்கம்.
இந்த நிலையில் தை அமாவாசையான நாளை (திங்கட்கிழமை) ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பண பூஜை செய்யவும், கோவிலில் தரிசனம் செய்யவும் வழக்கம்போல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ராமேசுவரம் கோவிலில் தை அமாவாசையன்று சாமி தரிசனம் செய்யவும் கடலில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
ஏற்பாடுகள் மும்முரம்
கொரோனா கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யவும் தீர்த்தமாடவும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி சாமி தரிசனம் செய்ய வசதியாக கோவிலில் சாமி சன்னதி பிரகாரம், 2-ம் பிரகாரம், 3-ம் பிரகாரம், அம்பாள் சன்னதி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்புகள் கட்டும் பணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நேற்று மும்முரமாக நடைபெற்றன.

Next Story