இ-சேவை மையத்தில் கணினி திருட்டு


இ-சேவை மையத்தில் கணினி திருட்டு
x
தினத்தந்தி 29 Jan 2022 7:38 PM GMT (Updated: 29 Jan 2022 7:38 PM GMT)

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி:
சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இ-சேவை மையத்தில் திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சீர்காழி கோவிந்தராஜன் நகரை சேர்ந்த உலகநாதன் மகன் ஆனந்தன் (வயது 28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு, மாலை இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு சென்றார்.
 மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இ-சேவை மையத்தில் இருந்த கணினி திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து ஆனந்தன், சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story