கடையநல்லூர் அருகே மருத்துவ கழிவுகளை கொட்டிய ரவுடி கைது

கடையநல்லூர் அருகே மருத்துவ கழிவுகளை கொட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே சங்கரப்பேரி பகுதியில் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களை சிலர் லாரியில் கொண்டு வந்து கொட்டிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுப்பொருட்களை லாரியில் ஏற்றி வந்து சங்கரப்பேரியில் கொட்டியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக சுரண்டை அருகே வீரசிகாமணி மேட்டு தெருவைச் சேர்ந்த பாலையா மகன் வேல்முருகனை போலீசார் கைது செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர் மீது சேர்ந்தமரம், சொக்கம்பட்டி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், அவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story