தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 29 Jan 2022 8:43 PM GMT (Updated: 29 Jan 2022 8:43 PM GMT)

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

பறக்கும் படையினர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய வாகன சோதனையிட சுழற்சி முறையில் தலா 3 தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு தேர்தல் பறக்கும் படையில் தாசில்தார் பொறுப்பிலான அதிகாரி ஒருவர், 2 போலீஸ்காரர்கள் என 15 தேர்தல் பறக்கும் படைகளில் மொத்தம் 45 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர வாகன சோதனை
இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளிலும், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளுக்கு தலா 30 வார்டுகளிலும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு வரப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆலத்தூர் துணை தாசில்தார் (தேர்தல்) கதிர் தலைமையில், அரும்பாவூர் போலீஸ் ஏட்டுகள் அன்பழகன், சுகன்யா ஆகியோர் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஆண்டிமடம் பகுதிகளில் பறக்கும் படையினர் மூன்று பிரிவாக பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story