பாசூர் அருகே மாரியம்மன் கோவிலில் பூஜையில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம்


பாசூர் அருகே மாரியம்மன் கோவிலில் பூஜையில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 29 Jan 2022 8:50 PM GMT (Updated: 29 Jan 2022 8:50 PM GMT)

பாசூர் அருகே மாரியம்மன் கோவிலில் பூஜையில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

ஊஞ்சலூர்
பாசூர் அருகே மாரியம்மன் கோவிலில் பூஜையில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 
மகாமாரியம்மன்
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள பாசூர் பழனிக்கவுண்டம்பாளையத்தில்        பழமையான மகாமாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் தை மாதம் குண்டம் விழா நடைபெறும். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 18-ந் தேதி கோவிலில் பூச்சாட்டப்பட்டது. 20-ந் தேதி கம்பம் நடப்பட்டது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பெண்கள் நாள்தோறும் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றினார்கள். 
ரூ.25 ஆயிரம்
இதையடுத்து 25-ந் தேதி மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய விழாவான குண்டம் விழா 26-ந் தேதி நடந்தது. காவிரியில் புனித நீராடிவிட்டு ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.  
அதைத்தொடர்ந்து பொங்கல் விழாவும், நேற்று முன்தினம் மறுபூஜையும் நடைபெற்றது.  அப்போது பூஜையில், அதாவது மாரியம்மன் மடியில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. அதை பழனிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலத்துக்கு எடுத்தார். 

Next Story