புதிதாக உதயமான ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் சரகத்துக்கு 8 போலீஸ் துணை கமிஷனர்கள் நியமனம்


புதிதாக உதயமான ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் சரகத்துக்கு 8 போலீஸ் துணை கமிஷனர்கள் நியமனம்
x
தினத்தந்தி 30 Jan 2022 10:24 AM GMT (Updated: 30 Jan 2022 10:24 AM GMT)

புதிதாக உதயமான ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக சரகத்துக்கு 8 போலீஸ் துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபி சக்ரவர்த்தி

தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1. சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் என்.குமார், தாம்பரம் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்படுகிறார்.

2. சென்னை ‘சைபர் கிரைம்’ போலீஸ் சூப்பிரண்டு எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி, தாம்பரம் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

3. சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக (நிர்வாகம்) துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

4. சென்னை மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜி.சுப்புலட்சுமி, தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்படுகிறார்.

5. அம்பத்தூர் துணை கமிஷனர் ஜெ.மகேஷ், ஆவடி சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

தீபா கனிகர்

6. சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் எம்.எம்.அசோக்குமார், ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

7. சென்னை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பி.பெருமாள், ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

8. கோவைபுதூர் பட்டாலியன் கமாண்டண்ட் ஜி.உமையாள், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக (நிர்வாகம்) துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

9. மதுரை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு எஸ்.எஸ்.மகேஸ்வரன், சென்னை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

10. சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் எஸ்.தீபா கனிகர், டெல்லி பட்டாலியன் கமாண்டண்டாக பதவி ஏற்பார்.

11. டெல்லி பட்டாலியன் கமாண்டண்ட் டி.செந்தில்குமார், கோவைபுதூர் பட்டாலியன் கமாண்டண்டாக நியமிக்கப்படுகிறார்.

அருண் பாலகோபாலன்

12. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக (நிர்வாகம்) துணை கமிஷனர் பி.மகேந்திரன், அடையார் துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

13.சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஏ.பிரதீப், பரங்கிமலை துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

14. வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆர்.சிவபிரசாத், அண்ணாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

15. பரங்கிமலை துணை கமிஷனர் அருண் பாலகோபாலன், சென்னை ‘சைபர் கிரைம்’ பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

16. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் வி.பாலசுப்பிரமணியன், சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

17. வேலூர் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Next Story