விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு


விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 30 Jan 2022 5:13 PM IST (Updated: 30 Jan 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் பி.டி.சி நகரில் உள்ள 4-வது தெருவில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை அகற்ற சென்ற மணிமங்கலம் இந்திராகாந்தி சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35) மற்றும் ஏழுமலை (35), ஆகிய இருவரும் கடந்த 19-ந்தேதி கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இறந்த ராஜேஷ் மற்றும் ஏழுமலை ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு தொகையை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் வழங்கினார். உடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, தாம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், தினகரன், மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், ஊராட்சி செயலர் கோபால் உள்பட பலர் உடனிருந்தனர்‌.

1 More update

Next Story