வண்டலூர் தாலுகா கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.50 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு


வண்டலூர் தாலுகா கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.50 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 30 Jan 2022 12:34 PM GMT (Updated: 30 Jan 2022 12:34 PM GMT)

வண்டலூர் தாலுகா கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.50 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் 5 ஏக்கர் அளவுள்ள அரசு கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் உள்ளது. இதை ஆக்கிரமிப்பு செய்து 13 வீடுகளை சிலர் கட்டி இருந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர் பொக்லைன் ஏந்திரத்துடன் கீரப்பாக்கம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு 5 ஏக்கர் அரசு நிலத்தில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது உறுதியானது. இதையடுத்து, 13 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றிய அதிகாரிகள்,அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய தடை என அறிவிப்பு பலகை அமைத்து சென்றனர். இதுகுறித்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீரப்பாக்கம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 5 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் ரூ.50 கோடி ஆகும்.

இவ்வாறு தாசில்தார் தெரிவித்தார்.


Next Story