புகையிலை விற்ற கடைக்காரர் கைது


புகையிலை விற்ற கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 1:44 PM GMT (Updated: 30 Jan 2022 1:44 PM GMT)

ஆறுமுகநேரியில் புகையிலை விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் ஆறுமுகநேரி பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆறுமுகநேரி வடக்கு பஜாரில், எஸ். எஸ். கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி என்பவரது கடையில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அந்த பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றது தெரிய வந்தது. 
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கடையில் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story