ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்; நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை


ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்; நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2022 3:07 PM GMT (Updated: 30 Jan 2022 3:07 PM GMT)

ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் 3 வீடுகள் கட்டப்பட்டு இருந்தது. இதனை அகற்றும் மாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் ஆண்டி, திருவள்ளூர் கோட்ட என்ஜினீயர் தர்ணிவாஷ் பெர்ணான்டோ தலைமையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் நடராஜன் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. 

இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. எனவே, 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊத்துக்கோட்டையில் இருந்து பெரியபாளையம் நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டன.


Next Story