கார்மோதி பா.ஜனதா நிர்வாகி பலி


கார்மோதி பா.ஜனதா நிர்வாகி பலி
x
கார்மோதி பா.ஜனதா நிர்வாகி பலி
தினத்தந்தி 30 Jan 2022 9:00 PM IST (Updated: 30 Jan 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

கார்மோதி பா.ஜனதா நிர்வாகி பலி

நெகமம்

நெகமம் மருதசெட்டி வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 45). இவர் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பா.ஜனதா விவசாய அணி தலைவர்.நேற்று மாலை  அண்ணாதுரையும், கோவில்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் (31) என்பவரும் அவரவர் இருசக்கர வாகனங்களில் நெகமம் அருகே உள்ள சிறுகளந்தைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். 

சிறுகளந்தை விக்னேஸ்வரா தனியார் பள்ளி அருகே வந்த போது, திருப்பூரிலிருந்து ஆழியார் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து  இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரையை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். 

காயமடைந்த பாலசுப்ரமணியம் பொள்ளாச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-----------------
1 More update

Next Story