நெல் கொள்முதலுக்கு பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை- விவசாயிகள்

நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் நல உரிமை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி:-
நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் நல உரிமை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் தலைவர் ராஜபாலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வடுவூர் பாலகிருஷ்ணன், குடவாசல் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சங்கத்தின் கோட்டூர் ஒன்றிய தலைவர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் வீரமணி, சுப்பிரமணியன், இளையராஜா, முருகன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் மூட்டைகளில் 40¾ கிலோவுக்கு கூடுதலாக எடை வைத்து நெல் கொள்முதல் செய்யக்கூடாது.
முறைப்படுத்த வேண்டும்
ஆன்லைன் பதிவு மூலம் கொள்முதல் செய்வதில் உள்ள குறைகளை களைந்து முறைப்படுத்த வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நியமனம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story