மாணவ- மாணவிகள் 4 பேருக்கு மருத்துவம் படிக்க அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம்


மாணவ- மாணவிகள் 4 பேருக்கு மருத்துவம் படிக்க அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம்
x
தினத்தந்தி 30 Jan 2022 4:15 PM GMT (Updated: 30 Jan 2022 4:15 PM GMT)

வாய்மேட்டை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4 பேருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

வாய்மேடு:
வாய்மேட்டை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4 பேருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
 மாவட்ட அளவில் முதலிடம்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகள் புவனேஸ்வரி. ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர், நீட் தேர்தவில் 465 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 8-ம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றார்.. இவருக்கு மருத்துவம் படிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
 இதே பள்ளியில் பிளஸ்-2 படித்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மகள் பிறைமதி நீட் தேர்வில் 293 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மருத்துவக்கல்லூரியில் இடம்
பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் சூர்யா. இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து நீட் தேர்வில் 287 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.  ஆயக்காரன்புரம் 1-ம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி மகன் பாலகுமாரன். ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர், நீட் தேர்வில் 288 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த 2 மாணவிகளும், 2 மாணவர்களும் சாதாரண விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர்கள், இவர்கள் தமிழ்வழியில் படித்ததால் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story