வயல்களில் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்

வயல்களில் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
x
தினத்தந்தி 30 Jan 2022 4:18 PM GMT (Updated: 30 Jan 2022 4:18 PM GMT)

வாய்மேட்டில் வயல்களில் புகுந்து நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு:
வாய்மேட்டில் வயல்களில் புகுந்து நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் நாசம்
. நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்தன. இதை தொடர்ந்து மழைநின்றவுடன் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றி நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து, உரம் தொளித்து வந்தனர்.தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
 இந்த நிலையில் வயல்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக புகுந்து நெற்பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. இதனால் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் மகசூல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
நிவாரணம்
வங்கியில் கடன் வாங்கி சாகுபடி செய்து வந்த நிலையில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story