அதிக செலவு செய்து எந்திரத்தில் அறுவடை செய்யும் விவசாயிகள்


அதிக செலவு செய்து எந்திரத்தில்  அறுவடை செய்யும் விவசாயிகள்
x
தினத்தந்தி 30 Jan 2022 4:28 PM GMT (Updated: 30 Jan 2022 4:28 PM GMT)

தாழ்வான வயல்களில் அறுவடைக்கு தயராக உள்ள நெல்பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் அதிக செலவு செய்து செயின் வீல் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காரைக்குடி, 
தாழ்வான வயல்களில் அறுவடைக்கு தயராக உள்ள நெல்பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் அதிக செலவு செய்து செயின் வீல் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
வயல்களில் தண்ணீர்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களைவிட இந்த ஆண்டு தொடக்கம் முதலே நல்ல மழை பெய்ய தொடங்கியதால் இங்குள்ள கண்மாய்கள், ஊருணிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் சென்றது. 
இதையடுத்து இந்த தண்ணீரை பயன்படுத்தி இங்குள்ள விவசாயிகள் நெல்பயிர் பயிரிட்டு அவற்றை பராமரித்து வந்தனர். இதற்கிடையில் இடையில் அவ்வப்போது பெய்த தொடர் மழை காரணமாகவும், பல்வேறு நெருக்கடி காரண மாகவும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை சந்தித்து தங்களது நெல்பயிரை காப்பாற்றி அவற்றை விளைவித்து வந்தனர். 
அதிக கட்டணம்
இந்தநிலையில் சிவகங்கை, காரைக்குடி அருகே சாக் கோட்டை, கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தாழ்வான பகுதியில் இருப்பதால் ஒரு சில இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வயல்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் அவற்றை வெளியேற்ற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். 
தற்போது அந்த வயல்களில் அறுவடைக்கு பயிர்கள் தயாராக இருந்தபோதிலும் அவற்றில் ஆட்களை கொண்டு இறக்க முடியாத நிலையிலும், அறுவடை எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையிலும் தவித்து வந்தனர்.
ஏனெனில் வயலில் தண்ணீர் தேங்கிய நிலையில் அறுவடை எந்திரம் உள்ளே இறங்கினால் அவை சேற்றில் சிக்கி கொள்ளும் நிலைக்கு உள்ளாகும். மேலும் ஆட்களை கொண்டு அறுவடை செய்தால் அறுவடை செய்து அந்த நெல்பயிரை தேங்கி நிற்கும் தண்ணீரில் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் தவித்து வந்த நிலையில் அறுவடை எந்திரத்தில் வீல் பொருத்திய வாகனம் மூலம் இந்த வயல்களில் இறக்கி அறுவடை செய்ய விவசாயிகள் முயற்சி செய்தனர். 
சாதாரண அறுவடை
ஏனெனில் இந்த வீல் பொருத்திய அறுவடை எந்திரமானது தண்ணீர் தேங்கிய நிலையில் கூட அவற்றில் உள்ளே இறங்கி அறுவடை செய்து விட்டு வெளியே வரும் திறன் கொண்ட தாக உள்ளதால் அவற்றின் மூலம் அறுவடை பணி மேற் கொண்டு வருகின்றனர். பொதுவாக சாதாரண அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது மணிக்கு ரூ.2,500 வாடகை கொடுத்து வந்தனர். 
 ஆனால் தற்போது இந்த செயின் வீல் பொருத்திய எந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது மணிக்கு ரூ.3,500 வரை கொடுக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதையடுத்து நெல் பயிரிட்டு அவற்றை பராமரித்த தொகை கூட கைக்கு வரவில்லையே என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

Next Story