அரக்கோணம் ஒன்றியத்தில் கட்டிடங்களை தரமாக கட்ட கலெக்டர் உத்தரவு


அரக்கோணம் ஒன்றியத்தில் கட்டிடங்களை தரமாக கட்ட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 30 Jan 2022 5:30 PM GMT (Updated: 30 Jan 2022 5:30 PM GMT)

அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கட்டிடங்களை தரமானதாக கட்ட உத்தரவிட்டார்.

அரக்கோணம்

அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கட்டிடங்களை தரமானதாக கட்ட உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.  பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளையும் நேரடியாக பார்வையிட்டார். அப்போது வீடு கட்டும் பணிக்கு நிதி உதவி கிடைக்காமல் பணி நிலுவையில் உள்ளதை பயனாளிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர். உடனே அதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

பின்னர், ஊராட்சியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 100 நாள் பணியாளர்கள் பணி நேரம் முழுவதும் பணி செய்வதையும், அதிக வயதானவர்களுக்கு வேலை வழங்கிடும்போது அவர்கள் பணி செய்வார்களா என்பதை உறுதி செய்து பணி வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார். 
தரமானதாக இருக்க வேண்டும்

தொடர்ந்து, அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.என்.பாளையம் ஊராட்சி தொடக்க பள்ளியில் ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை பார்வையிட்டார். அப்போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் இல்லாமல் இருந்ததை பார்த்து பள்ளியை சுற்றிலும் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டார்.  கட்டுமான பணிகள் தரமானதாக இருப்பதை பொறியாளர்கள் உறுதி செய்ய உத்தரவிட்டார்.

ஆய்வின்போது உதவி திட்ட அலுவலர் மதுமிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story