2-வது திருமணம் செய்த தொழிலாளி கைது


2-வது திருமணம் செய்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 6:28 PM GMT (Updated: 30 Jan 2022 6:28 PM GMT)

மயிலாடுதுறையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
காதல் திருமணம்
மயிலாடுதுறை அய்யாறப்பர் தெற்கு வீதியை சேர்ந்தவர் சின்னத்துரை மகள் கார்த்திகா (வயது 28). குத்தாலம் அருகே திருமணஞ்சேரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் மாரியப்பன் (32). கூலித்தொழிலாளியான மாரியப்பனும், கார்த்திகாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 
நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணமான 5 மாதத்தில் கார்த்திகா பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பெரியோர்கள் சமாதானம் செய்து கார்த்திகாவை, மாரியப்பனுடன் சேர்த்து வைத்தனர்.
தொழிலாளி கைது
இதனால் கார்த்திகா நேற்று முன்தினம் மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வேறொரு பெண் இருந்துள்ளார். அதுகுறித்து விசாரித்தபோது மாரியப்பன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கார்த்திகாவுக்கு தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியப்பனை கைது செய்தனர். 

Next Story