சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
சீர்காழி:
சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தீமிதி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம் இரவு வீதிஉலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீமிதி திருவிழாவையொட்டி காலை பால்குட வீதிஉலாவும், அதனை தொடர்ந்து இரவு பச்சைக்காளி, பவளக்காளி ரூபத்தில் அம்மன் வீதிஉலாவும், பின்னர் இரவு கோவிலின் முன்பு தீமிதி உற்சவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story