நீதிமன்றத்தை ஏமாற்றியவர் மீது வழக்கு

நீதிமன்றத்தை ஏமாற்றியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
திருமங்கலம் தென்கால்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). விபத்தில் காயமடைந்த இவர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி அவருக்கு ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 916 நீதிமன்றம் தீர்ப்பின் மூலமாக வழங்கப்பட்டது. அந்த பணம், ஒரு தேசிய வங்கியின் மூலம், அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பெற்ற தொகையை மறைத்து இழப்பீடு பெறவில்லை என கூறி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் பிரபாகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின்போது அவர் ஏற்கனவே இழப்பீட்டு தொகையை பெற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story