கொளப்பாக்கத்தில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு


கொளப்பாக்கத்தில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 31 Jan 2022 11:44 AM GMT (Updated: 2022-01-31T17:14:51+05:30)

கொளப்பாக்கத்தில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு போனது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27-ந் தேதி வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.35 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி கடையில் இருந்த கேமராவை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story