சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-மடிக்கணினி திருட்டு


சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 31 Jan 2022 12:58 PM GMT (Updated: 31 Jan 2022 12:58 PM GMT)

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-மடிக்கணினி திருடுப் போனது தெரியவந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் ராஜேந்திரன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பியூலா பாக்கியம் (வயது 38). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி கொண்டு பாரேரியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் மடிக்கணினி திருடுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து பியூலா பாக்கியம் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story
  • chat