நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்
x
தினத்தந்தி 31 Jan 2022 1:08 PM GMT (Updated: 2022-01-31T18:38:44+05:30)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்

ஊட்டி

ஊட்டி அருகே ஆசிங்டன் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதை சீரமைக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள்  ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் கோரிக்கையை வலியுறுத்தி எழுதப்பட்ட மனுவை போட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.


Next Story