கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுழற்சி முறையில் 3 பறக்கும் படையினர் தொடர் வாகன சோதனை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நகர்ப்புற நகராட்சி தேர்தலையொட்டி 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 17,616 வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல் அலுவலர் யமுனா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி துவங்கிய நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து இதுவரை 25 விண்ணப்பங்களை வேட்பாளர்கள் பெற்று சென்று உள்ளனர். ஆனால் கடந்த சனிக்கிழமை வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன தணிக்கை
இந்த நிலையில், தேர்தலையொட்டி 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய பறக்கும் படையினர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் தொடர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட வெள்ளியூர் துணை வட்டாட்சியர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பரிசு பொருட்களை யாராவது எடுத்து செல்கிறார்களா? என்றும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், செயல் அலுவலருமான யமுனா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story