நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 4:01 PM GMT (Updated: 31 Jan 2022 4:01 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான வாக்குகளை எண்ணுகின்ற மையமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஆவடி மாநகராட்சி மற்றும் திருநின்றவூர் நகராட்சிக்கு பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து கல்லூரி. பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள் மற்றும் திருமழிசை பேரூராட்சிக்கு பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. திருத்தணி நகராட்சிக்கு திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலை அறிவியல் கல்லூரி.

திருவள்ளூர் நகராட்சிக்கு திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பொன்னேரி நகராட்சிக்கு பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஆரணி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், கும்மிடிப்பூண்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி. பள்ளிப்பட்டு, பொதட்டூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி. ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ள தொன்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story