சேவல் சூதாட்டம் 4 பேர் கைது


சேவல் சூதாட்டம் 4 பேர் கைது
x
சேவல் சூதாட்டம் 4 பேர் கைது
தினத்தந்தி 31 Jan 2022 4:05 PM GMT (Updated: 2022-01-31T21:35:15+05:30)

சேவல் சூதாட்டம் 4 பேர் கைது

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் தாமரைக் குளத்தை அடுத்துள்ள மாசநாயகன்புதூர், ஆத்து மேட்டு பகுதியில் சேவல் சண்டை நடைபெறுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்த காணியாலாம் பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் வயது (வயது34), தாமரைக்குளம், மெயின் ரோட்டை சேர்ந்த சரத்குமார் (22), கோவை கணபதி நல்லாம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (47), கோடங்கிபாளையம் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, சூதாட்டத்திற்க்கு பயன்படுத்திய 2சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story