சாலையில் நடந்து சென்ற புலி


சாலையில் நடந்து சென்ற புலி
x
சாலையில் நடந்து சென்ற புலி
தினத்தந்தி 31 Jan 2022 4:11 PM GMT (Updated: 31 Jan 2022 4:11 PM GMT)

சாலையில் நடந்து சென்ற புலி

வால்பாறை

இந்த நிலையில் வால்பாறைக்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளில் யாரோ ஒருவர் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்று வனப்பகுதிக்குள் தாவிக்குதித்து பாய்ந்து செல்லும் காட்சியை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார். 

 இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. புலி நடந்து செல்லும் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் இதே இடத்தில்5 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு குட்டிப்புலிகள் சாலையோர தடுப்பு வழியாக நடந்து சென்று வனப்பகுதிக்குள் சென்றதை இரவு நேர பஸ்சில் வந்தவர்கள் பார்த்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 இந்த வைரலாகும் வீடியோ சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில்  கண்காணிப்பு கேமரா பொருத்தி,அந்த இடத்தில் புலிகள் நடமாடும் பகுதி என்று அறிவிப்பு பலகை வைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வால்பாறை பகுதி வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story