விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ஆனைமலை
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று ஆனைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு நடைபெற்றது. அப்போதுகூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிக்கான கட்-ஆப் தேதியான ஜனவரி 31-ந் தேதியை மார்ச் மாதம் 31-ந்் தேதி வரை நீட்டிக்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் முறைப்படி பயிர் கடன் தள்ளுபடி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டத்தில் திரளானபேர் கலந்து கொண்டனர். இதுபோல் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரிமலை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.இதில்,சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறுபகுதியில் இருந்து திரளான விவசாயிகள்கலந்துகொண்டனர்.
தங்கள்கோரிக்கையை வலியுறுத்தி, கூட்டுறவு கடன் சங்க மேலாளரிடம் மனு அளித்தனர். முன்னதாக, மனு அளிக்க ஒருவர் மட்டும் செல்லவேண்டும் என போலீசார் கூறியதால்போலீசார், விவசாயிகளுக்கு இடையே சிறிது நேரம்வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின், விவசாயிகள்பலர் சென்று மேலாளரிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story