தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
திறக்கப்படாத கழிவறை
பந்தலூர் அருகே கையுன்னி சுல்தான் பத்தேரி-அய்யன்கொல்லி சந்திப்பில் உள்ளது. இதனால் இந்தப்பகுதிக்கு தினமும் ஏராள மான பொதுமக்கள் வந்து செல்வது உண்டு. எனவே இங்கு பொது மக்களின் நலன்கருதி கழிவறை கட்டப்பட்டது. இது பழுதானதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப் பட்டது. ஆனால் இன்னும் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. இதனால் இங்கு வருபவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே பூட்டிக்கிடக்கும் கழிவறையை திறக்க வேண்டும்.
செல்வம், கையுன்னி
மின்விளக்குகள் வேண்டும்
கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி மேம்பாலம் கீழ் பகுதியில் மின் விளக்குகள் இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால் இரவில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சில நேரத்தில் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு உடனடியாக மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.
செந்தில்குமார், முள்ளுப்பாடி.
போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ்நிலைய ரோடு மிகவும் குறுகலானது ஆகும். இங்கு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் முன்பு சிலர் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங் களை நிறுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து களும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
எஸ்.சுகன்யா, பொள்ளாச்சி.
வழிகாட்டி பலகையால் ஆபத்து
ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரம் நடை பாதை உள்ளது. இதன் குறுக்கே வழிகாட்டி பலகை தாழ்வாக அமைந்து இருக்கிறது. இதனால் நடந்து செல்கிறவர்கள் குனிந்து செல்ல வேண்டி உள்ளது. எதிர்பாராத நேரத்தில் தலையில் இடிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தாக இருக்கும் இந்த வழிகாட்டி பலகையை உயர்த்தி அமைக்க வேண்டும்.
பிரபா, ஆர்.கே.புரம்.
விபத்து ஏற்படும் அபாயம்
ஊட்டி-மஞ்சூர் சாலை தேவர்சோலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் சாலையோரத்தில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புஷ்பா, தேவர்சோலை.
கூடுதல் டாக்டர் வேண்டும்
பொள்ளாச்சியில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஆனால் அங்கு போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
ஆனந்தன், பொள்ளாச்சி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை ஜி.வி. ரெசிரென்சி முதலாவது குறுக்கு வீதி கிழக்கு அவன்யூ பகுதியில் கிழிந்த துணிகள் மற்றும் குப்பைகள் மலை போன்று குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
மணி, ஜி.வி.ரெசிடென்சி.
சுற்றுலா பயணிகளால் விபத்து
ஆனைமலை அருகே சுப்பேகவுண்டன்புதூரில் இருபுறமும் நீண்டு வளர்ந்த மரங்கள் உள்ளது. இதனால் இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் அங்கு வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுப்பது டன் புகைப்படமும் எடுப்பது உண்டு. இந்த சாலை குறுகலாக இருப்பதால் இங்கு வாகனங்களை நிறுத்தி அதன் மீது அமர்ந்து புகைப்படம் எடுப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், அவ்வப்போது விபத்தும் நடந்து வருகிறது. எனவே போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோன்மணி, ஆனைமலை.
தெருநாய்கள் தொல்லை
கோவை காந்திமாநகரில் உள்ள மைதானம் அருகே வீதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. கூட்டங்கூட்ட மாக சுற்றும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர் களை துரத்துகிறது. அத்துடன் தனியாக நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களையும் துரத்தி கடிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
பெருமாள்சாமி, காந்திமாநகர்.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
கோவை பீளமேடு புதூர் கந்தசாமி நாயுடு தெரு திருமகள் நகர் நுழைவு பகுதியின் எதிரே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் அதில் குப்பைகளும் கலந்து இருப்பதால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. பல நாட்களாக இதுபோன்றே இருப்பதால் இங்கு ெதாற்றுநோய் பரவும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் குப்பைகளை அகற்றி கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
நிர்மலா, பீளமேடுபுதூர்.
Related Tags :
Next Story






