நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 11:16 PM IST (Updated: 31 Jan 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்:
நாகையில் நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டம்
நாகை அவுரித்திடலில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரபோஜி தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அமிர்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் பேரறிவாளன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கல்லார் ரபிக், தேசிய மீனவர் பேரவை மாநில தலைவர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அரசு வேலை வழங்க வேண்டும்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தில்  உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 உயர்த்தி வழங்க வேண்டும். 
அரசு நிறுவனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
1 More update

Next Story