திரவுபதியம்மன் கோவிலில் எருதாட்ட விழா


திரவுபதியம்மன் கோவிலில் எருதாட்ட விழா
x
தினத்தந்தி 31 Jan 2022 5:49 PM GMT (Updated: 31 Jan 2022 5:49 PM GMT)

மேல்மலையனூர் அருகே திரவுபதியம்மன் கோவிலில் எருதாட்ட விழா நடைபெற்றது.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  தை மாத அமாவாசை அன்று எருதாட்ட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், பஞ்சபாண்டவர் சாமிகளுக்கும்  பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் முன்பு உள்ள மந்தைவெளியில் பஞ்சபாண்டவர் மற்றும் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மேள, தாளம் முழங்க எருதாட்ட விழா நடைபெற்றது.  இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்  விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story