வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிப்பு
வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிப்புவகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிப்பு
வால்பாறை
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 1 -ந் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் 1-ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரை பள்ளிகள் மூடப்பட்டு ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கூடம் சென்று வந்தனர்.
இந்த நிலையில் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வந்தது.
மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் பள்ளிகள் மூடப்பட்டது.ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், இரவில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் பள்ளிக்கூடங்களிலும், வகுப்பறைகளிலும் கிருமிநாசினிகளை தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story






