சென்னையில் ஆன்லைன் மூலம் விபசாரம்: நட்சத்திர ஓட்டல் அழகிகள் 4 பேர் கைது


சென்னையில் ஆன்லைன் மூலம் விபசாரம்: நட்சத்திர ஓட்டல் அழகிகள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2022 3:53 PM IST (Updated: 1 Feb 2022 3:53 PM IST)
t-max-icont-min-icon

தனிப்படை போலீசார், தியாகராயநகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சோதனை போட்டு 4 வெளிமாநில விபசார அழகிகளை கைது செய்தனர்.

சென்னையில் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து வெளிமாநில அழகிகள் சிலர், விபசார தொழில் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த அழகிகள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்துக்கு சென்று உல்லாச விருந்து படைப்பதாகவும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி விபசார தடுப்பு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். உதவி கமிஷனர் துரை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தியாகராயநகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சோதனை போட்டு 4 வெளிமாநில விபசார அழகிகளை கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டு உத்தரவுபடி, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த அழகிகளை விமானத்தில் சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்த அடிப்படையில் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பிரபல தரகர் ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த 3 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story