மாங்காடு அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு


மாங்காடு அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
x

மாங்காடு அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் அரிஷ்குமார் (வயது 36). இவர் ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை காலி செய்துவிட்டு மற்றொரு தெருவில் உள்ள வீட்டிற்கு வாடகைக்கு செல்வதற்காக பொருட்களை எடுத்து வெளியே வைத்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பொருட்களை எடுத்து செல்ல முயன்றபோது, அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கி, எச்சரித்து அனுப்பினார். பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்த போது, அரிஷ்குமார் மொபட் தீப்பிடித்து எரிந்து நாசமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல் மாங்காடு, சாதிக் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (54). இவர் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடிரென தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story