மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நாட்டு படகு மீனவர்களுக்கு கட்டுமரத்திற்கு மாற்றாக 10 மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடி நாரிழை படகு வெளிப்பொருத்தும் எந்திரம், மீன்பிடிவலைகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் குளிரூட்டப்பட்ட நான்கு சக்கரவாகனம், மீன் விற்பனை செய்ய குளிர்சாதன பெட்டிகளுடன் கூடிய மூன்று சக்கர வாகனம், மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இதேபோல் மீன்பிடிக்குபோது ஏற்படும் மரணம் மற்றும் நிரந்தர ஊனம் ஆகியவற்றிற்காக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மீன்பிடி தொழிலின்போது விபத்து ஏற்பட்டால் ஆஸ்பத்திரி செலவிற்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் விபத்து ஏற்படும் அன்றே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அவர்களுக்கு விபரம் தெரிவித்து 30 நாட்களுக்குள் நிவாரணம் பெற்றிடலாம். இது தொடர்பான அனைத்து விவரங்களுக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story






