செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 46 பேர் வேட்புமனு தாக்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 6 பேருராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நிலுவையில் உள்ள தங்கள் வரிகளையும் அவர்கள் செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர் வார்டு பங்கீடு சம்மந்தமாக தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தாம்பரம் மாநகராட்சியில் 31 பேர், நகராட்சிகளில் 6 பேர், பேரூராட்சிகளில் 9 பேர் என மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story






