ஆழியாறு அணை, பூங்காவுக்கு செல்ல அனுமதி


ஆழியாறு அணை, பூங்காவுக்கு செல்ல அனுமதி
x
ஆழியாறு அணை, பூங்காவுக்கு செல்ல அனுமதி
தினத்தந்தி 1 Feb 2022 9:12 PM IST (Updated: 1 Feb 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணை, பூங்காவுக்கு செல்ல அனுமதி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 8-ந்தேதி அணை, பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நுழைவு வாயில் மூடப்பட்டு, அறிவிப்பு நோட்டீசு ஒட்டப்பட்டது.

இந்த நிலையில் தொற்று பரவல் குறைந்ததால் பூங்காக்களில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அறிவி க்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆழியாறு அணை மற்றும் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர். அணை முன் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
1 More update

Next Story