ரேக்ளா வண்டி மீது கார் மோதல்: மாடு சாவு


ரேக்ளா வண்டி மீது கார் மோதல்: மாடு சாவு
x
ரேக்ளா வண்டி மீது கார் மோதல்: மாடு சாவு
தினத்தந்தி 1 Feb 2022 9:22 PM IST (Updated: 1 Feb 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

ரேக்ளா வண்டி மீது கார் மோதல் மாடு சாவு

ஆனைமலை


கேரளா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது ரேக்ளா மாட்டு வண்டியில் திருமூர்த்தி மலைக்கு சென்றார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல அங்கிருந்து கிளம்பினார்.
ஆனைமலை சாலையிலுள்ள காளியப்ப கவுண்டன் புதூர் பிரிவு அருகே வந்தபோது பின்னால் வேகமாக கார் ரேக்ளா வண்டி மீது பயங்கரமாக மோதியது.  காரை ஆனைமலையை அடுத்த பெரியபோது பகுதியை சேர்ந்த மணிக்குமார் (30) என்பவர் ஓட்டிவந்தார்.

இந்த நிலையில் இந்த விபத்தில் ரேக்ளா வண்டியை ஓட்டி வந்த சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டார். மேலும் ரேக்ளா வண்டியில் பூட்டப்பட்டிருந்த ஒரு மாடானது  சம்பவ இடத்திலேயே பரிதாமாக பலியானது. மற்றொரு மாட்டுக்கு பயங்கரமாக அடிபட்டு அதன் எலும்பு முறிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர் மணிக்குமார் செய்வதறியாது காரை அப்படியே நிறுத்திவிட்டு தலைமறைவானார். 
இந்த விபத்து பற்றி அறிந்ததும் அக்கம், பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயமடைந்த சதீஷ்குமாரை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில், இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான மாட்டை பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கால் எலும்பு முறிந்த மற்றொரு மாட்டையும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.  இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் டிரைவர் மணிக்குமாரை ஆனைமலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

1 More update

Next Story