காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.7½ லட்சம் சிக்கியது


காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.7½ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 2 Feb 2022 1:46 PM IST (Updated: 2 Feb 2022 1:46 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.7½ லட்சம் சிக்கியது.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில் காஞ்சீபுரம் பழைய ரெயில்வே சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி காரில் மேத்தா என்பவர் ரூ.7½ லட்சம் எடுத்து சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரூ.7½ லட்சத்தை பறிமுதல் செய்து காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணனிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

உரிய ஆவணங்களை சமர்பித்த பிறகே பணம் திருப்பி ஒப்படைக்கபடும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கருங்குழி, அச்சரப்பாக்கம், இடைக்கழிநாடு போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் எதிரே மதுராந்தகம்- சூனாம்பேடு சாலையில் மதுராந்தகம் சமூக நல துறை தாசில்தார் துரைராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கல்பாக்கத்தில் இருந்து மேல்மருவத்்தூர் நோக்கி திருக்கழுக்குன்றம் தாலுகா பெருமாள் ஏரியை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது அதில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை மதுராந்தகம் கருவூலத்தில் தாசில்தார் துரைராஜிடம் ஒப்படைத்தனர்.
1 More update

Next Story