முக்கிய நபரை 3 நாள் விசாரிக்க போலீசுக்கு அனுமதி

கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
கிணத்துக்கடவு
கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
ரூ.15 லட்சம் பறிப்பு
கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (வயது 53). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி இவருடைய வீட்டிற்கு டிப்-டாப் உடையணிந்து வந்தவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்றுக்கூறி பஞ்சலிங்கத்திடம் இருந்து ரூ.15 லட்சம், செல்போன், ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்து சென்றனர்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (36), ராமசாமி (47), ஆனந்த் (47), தியாகராஜன் (42), பிரவீன் குமார் (36), மோகன்குமார் (30), மணிகண்டன் (37) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
கோர்ட்டில் சரண்
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான கோவையை சேர்ந்த மேத்யூ, பைசல், காரணம்பேட்டை மகேஸ் வரன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து கடந்த 24-ந் தேதி மேத்யூ பொள்ளாச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே அவரை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் பொள்ளாச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தது.
3 நாட்கள் விசாரிக்க அனுமதி
மனுவை விசாரித்த நீதிபதி மேத்யூவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் தலைமைறைவாக உள்ள மகேஸ்வரன், பைசல் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






