களைகட்டிய கடைசி நாள் வேட்புமனு தாக்கல்


பொள்ளாச்சி, பிப்.5- நகராட்சி, பேரூராட்சிகளில் கடைசிநாள் வேட்புமனு தாக்கல் களைகட்டியது. சமூக இடைவெளியை மறந்தனர்
x
பொள்ளாச்சி, பிப்.5- நகராட்சி, பேரூராட்சிகளில் கடைசிநாள் வேட்புமனு தாக்கல் களைகட்டியது. சமூக இடைவெளியை மறந்தனர்
தினத்தந்தி 4 Feb 2022 8:43 PM IST (Updated: 4 Feb 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

களைகட்டிய கடைசி நாள் வேட்புமனு தாக்கல்

பொள்ளாச்சி

நகராட்சி, பேரூராட்சிகளில் கடைசிநாள் வேட்புமனு தாக்கல் களைகட்டியது. சமூக இடைவெளியை மறந்தனர்.

களைகட்டிய அலுவலகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொள்ளாச்சி நகராட்சியில் 9 வார்டுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில் 36 வார்டுகளுக்கு 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். நேற்று பகல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.

பகல் 12 மணிக்கு நல்ல நேரம் தொடங்கிய பிறகு அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திரண்டு வந்தனர். இதனால் நகராட்சி அலுவலகம் மதியத்திற்கு பிறகு களைகட்டியது.

வேட்பாளர்கள் அலட்சியம்


அலுவலகத்திற்கு வெளியே கூட்டமாக நின்றவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் போலீசார் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் மேள தாளம் முழுங்க ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அலுவலக வளாகத்திற்குள் சில வேட்பாளர்களுக்கு ஆதரவளார்கள் மாலை அணிவித்து வெற்றி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலையை கண்டறியும், கிருமி நாசினி மருந்து (சானிடைசர்) வழங்க நின்ற ஊழியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

பரிசோதனை செய்து விட்டு செல்லுமாறு ஊழியர்கள் கூறியும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் அலட்சியமாக அலுவலகத்திற்குள் சென்றனர். இதற்கிடையில் வேட்புமனு தாக்கல் முடிந்ததும் அலுவலக வளாகத்திற்குள் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதேபோன்று சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிகளிலும் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
1 More update

Next Story