மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் விபரீதம் சுத்தியலால் அடித்து மைத்துனர் கொலை

மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மைத்துனரை சுத்தியலால் அடித்து கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார்கைது செய்தனர்.
கோவை
மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மைத்துனரை சுத்தியலால் அடித்து கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார்கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து (வயது 26). இவர் கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவருடைய அக்கா முத்துலட்சுமிக்கும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜா என்ற ராஜனுக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. ராஜனுக்கும், அவரு டைய மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் ராஜனுக்கு அவரது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது.
சேர்ந்து வாழ மறுப்பு
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முத்துலட்சுமி கணவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்தில் உள்ள தம்பியின் வீட்டிற்கு வந்தார்.
இதை அறிந்த ராஜன், தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். அதற்கு முத்துலட்சுமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
முத்துவின் ஆதரவு இருப்பதால் தான் மனைவி தன்னுடன் வாழ மறுப்பதாக ராஜன் கருதியதாக தெரிகிறது. எனவே முத்துவை கொலை செய்ய ராஜன் திட்டமிட்டார்.
சுத்தியலால் அடித்து கொலை
இதைத்தொடர்ந்து ராஜன், தர்மபுரியில் இருந்து கோவை வந்து முத்து மற்றும் முத்துலட்சுமி தங்கியிருந்த வீட்டின் அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு பதுங்கி இருந்தார். அந்த நேரத்தில் முத்துலட்சுமி கழிப்பறை செல்வதற்காக கதவை திறந்து வெளியே வந்தார்.
உடனே ராஜன், முத்துலட்சுமிக்கு தெரியாமல் நைசாக வீட்டிற்குள் சென்றார். அங்கு வீட்டுக்குள் முத்து படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். இதை பயன்படுத்தி ராஜன், தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் முத்துவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த முத்து, வலியால் அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு முத்துலட்சுமி மற்றும் அக்கம் பக்கத்தி னர் ஓடிவந்தனர். அதற்குள் ராஜன் தப்பி சென்று விட்டார். இதற்கிடையே ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முத்து துடிதுடித்து இறந்தார்.
கைது
இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியான ராஜனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






