வியாபாரிகளிடம் ரூ.10½ லட்சம் பறிமுதல்


வியாபாரிகளிடம் ரூ.10½ லட்சம் பறிமுதல்
x
வியாபாரிகளிடம் ரூ.10½ லட்சம் பறிமுதல்

வியாபாரிகளிடம் ரூ.10½ லட்சம் பறிமுதல்

கோவை

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடை பெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த கடந்த 26-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதை மீறி வாக்காளர்க ளுக்கு பணம், அன்பளிப்பு வழங்குவதை தடுக்க கோவையில் 72 பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி ஒரு பறக்கும் படையில் மாநகராட்சி அதிகாரி , 2 போலீசார், ஒளிப்பதிவாளர் என 4 பேர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் கோவை மாநக ராட்சி தெற்கு மண்டலம் மைல்கல் சோதனைச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரி முத்து தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காருக்குள் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அந்த காரில் பணம் கொண்டு வந்த கேரள மாநிலம் பாலக்காடு சிவாஜி நகரை சேர்ந்த கிருஷ்ணமணி (வயது 65) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், கேரளாவில் வாழை இலைக்கடை வைத்து வியாபாரம் செய்வதும், கோவையில் வாங்கிய வாழை இலைக்கு விவசாயிகளிடம் கொடுப்பதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் கூறினார். ஆனால் அவரிடம் பணம் கொண்டு வந்ததற்கு உரிய ஆவணங்கள் இல்லை. 

எனவே அவரிடம் இருந்து  ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் மாநகராட்சி வடக்கு மண்டலம் ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் சுமதி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பீளமேடு துரைசாமி லே-அவுட்டை சேர்ந்த வியாபாரி பாவுக் பைத் என்பவர் காரில் வந்தார். 

அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.90 ஆயிரத்து 500-ஐ இருந்தது. அது பற்றி அதிகாரிகள் விசாரித்த போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தது தெரிய வந்தது. உடனே ரூ.90 ஆயிரத்து 500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் நேற்று ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.10 லட்சத்து 40 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

Next Story