தென்காசி மாவட்டத்தில் 440 வார்டுகளில் 2,212 வேட்புமனுக்கள் ஏற்பு


தென்காசி மாவட்டத்தில் 440 வார்டுகளில் 2,212 வேட்புமனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 1:29 AM IST (Updated: 6 Feb 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 440 வார்டுகளில் நேற்று 2,212 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 440 வார்டுகளில் நேற்று 2,212 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

உள்ளாட்சி தேர்தல்

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, செங்கோட்டை, தென்காசி ஆகிய 6 நகராட்சிகளிலும், ஆலங்குளம், அச்சன்புதூர் உள்பட 17 பேரூராட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. 

இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள 440 வார்டுகளில் போட்டியிட 2,238 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது பல்வேறு காரணங்களுக்காக 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 2,212 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கடையநல்லூர்

கடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 212 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 208 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகளில் 232 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 228 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகளில் போட்டியிட 171 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியிருந்தன. இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது போக 170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சுரண்டை நகராட்சியில் 27 வார்டுகளில் பெறப்பட்ட 156 வேட்புமனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 155 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

செங்கோட்டை

செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளுக்கு 80 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது போக மீதமுள்ள 76 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தென்காசி நகராட்சியில் 33 வார்டுகளில் போட்டியிட 206 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 205 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

மொத்தமுள்ள 6 நகராட்சிகளிலும் 180 வார்டுகளுக்கு 1,057 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1,042 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பேரூராட்சிகள்

அச்சன்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 79 வேட்புமனுக்களும், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் 15-வார்டுகளுக்கு பெறப்பட்ட 51 மனுக்களும், ஆய்க்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 83 மனுக்களும், இலஞ்சி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 66 மனுக்களும், கீழப்பாவூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு பெறப்பட்ட 70 மனுக்களும், மேலகரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 85 மனுக்களும், பண்பொழி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 64 மனுக்களும், புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 58 மனுக்களும், ராயகிரி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 38 மனுக்களும், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 40 மனுக்களும், வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு பெறப்பட்ட 73 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த பேரூராட்சியில் வேட்புமனுக்கள் எதுவும் தள்ளுபடி ஆகவில்லை.

ஆலங்குளம்

ஆலங்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 74 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. குற்றாலம் பேரூராட்சியில் 8 வார்டுகளுக்கு மொத்தம் 31 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 28 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு பெறப்பட்ட 95 வேட்புமனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 94 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சிவகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 113 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 110 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. திருவேங்கடம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 67 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 65 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 94 வேட்புமனுக்கள் தாக்கல் ஆனது. இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது போக மீதமுள்ள 93 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மொத்தமுள்ள 17 பேரூராட்சிகளில் 260 வார்டுகளுக்கு பெறப்பட்ட 1,181 வேட்புமனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1,170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

Next Story