ராயப்பேட்டையில் வடசென்னை இளைஞர்களின் புகைப்பட கண்காட்சி
ராயப்பேட்டையில் வடசென்னை இளைஞர்களின் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார்.
வடசென்னையில் உள்ள 14 முதல் 22 வயது வரையிலான இளைஞர்கள் எண்ணூர், மணலி, பழவேற்காடு பகுதியின் சீரழிந்த நிலப்பரப்பில் 6 மாதங்கள் சுற்றித்திரிந்து தங்களின் சொந்தக்கதையை தாங்களே காட்சிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக வேலைக்கும், சகதிக்கும் இடையில் சிக்கிக் கொண்ட வாழ்க்கையை, மகிழ்ச்சிக்கும், வலிக்கும் இடையில் அல்லாடும் பொழுதுகளை, வாழ முடியா சூழலை படமாக்கினர். அவர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாலி அரங்கத்தில் இயற்கை, கலாசாரம், வேலை, விளையாட்டு, துயரம் என பல்வேறு கருப்பொருட்களில் பிரித்து ‘ரீ பிரேம்டு' என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story