பழுதடைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதை


பழுதடைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதை
x
தினத்தந்தி 6 Feb 2022 10:25 AM (Updated: 6 Feb 2022 10:25 AM)
t-max-icont-min-icon

பழுதடைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதை

உடுமலை தளி சாலையில்  ரெயில்வே சுரங்கப்பாதை  வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின்போது, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதையில் தளம் பழுதடைந்துள்ளது.அதனால் இந்த சுரங்கப்பாதை தளத்தில்பாதிக்குமேற்பட்ட பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதனால் குண்டும், குழியுமாக உள்ள இந்த ரெயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணிகளை செய்யவேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

1 More update

Next Story