இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
தினத்தந்தி 13 Aug 2025 9:35 AM IST (Updated: 15 Aug 2025 6:20 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 13 Aug 2025 6:22 PM IST

    17 புறநகர் ரெயில்கள் ரத்து

    சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் இடையே நடைபெற்று வரும் பொறியியல் பணிக்காரணமாக ஆகஸ்ட் 14, 16, 18 ஆகிய மூன்று நாட்களுக்கு 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

  • 13 Aug 2025 6:21 PM IST

    தமிழிசையை தடுத்த போலீசார்

    சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை சந்திக்கவிருந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தடுப்பு நிறுத்தப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலேயே தமிழிசை தடுத்து நிறுத்தப்பட்டார்.

  • ரஜினிகாந்துக்கு  சிவகார்த்திகேயன் வாழ்த்து
    13 Aug 2025 6:20 PM IST

    ரஜினிகாந்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

    உங்களைப் பார்த்து, உங்களைப் போல மிமிக்ரி செய்து, உங்களது பாதையில் பயணித்து இப்போது நீங்கள் இருக்கும் துறையிலேயே இருப்பது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள். உங்கள் கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக 'கூலி' திரைப்படம் ஜொலிக்கும்” என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

  • 13 Aug 2025 6:17 PM IST

    ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை முதல் ஆக.18ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

  • காவல்துறையினர் குவிப்பு - பதற்றமான சூழல்
    13 Aug 2025 5:28 PM IST

    காவல்துறையினர் குவிப்பு - பதற்றமான சூழல்

    சென்னை ரிப்பன் மாளிகை காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை அருகே பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களை கைது செய்து அழைத்து செல்ல 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

  • 13 Aug 2025 5:19 PM IST

    பாலியல் தொல்லை - காவலர் கைது

    திருச்சி மாவட்டம் பொன்மலையில் அஞ்சலக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காணக்கிளியநல்லூர் பகுதியில் காவலராக பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.அஞ்சலக பெண் ஊழியர் பைக்கில் சென்றபோது பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு என புகார் அளிக்கப்பட்டது.

  • தூய்மை பணியாளர்கள் கலைந்து போக காவல்துறையினர் அறிவுறுத்தல்
    13 Aug 2025 5:19 PM IST

    தூய்மை பணியாளர்கள் கலைந்து போக காவல்துறையினர் அறிவுறுத்தல்

    தூய்மை பணியாளர்கள் கலைந்து போக காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வெளிநபர்கள் யாரும் உள்ளே இருக்க கூடாது என காவல்துறையினர் கூறியுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் வழக்கு போடுவோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடர்கிறது.

  • 13 Aug 2025 4:54 PM IST

    தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

    சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தநிலையில் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.இனி முதல்-அமைச்சரோடுதான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தூய்மை பணியாளர்கள் கூறியுள்ளனர்.

    முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை
    13 Aug 2025 4:45 PM IST

    ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை

    சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 13 Aug 2025 4:30 PM IST

    கூலி டிக்கெட் இலவசம்

    தஞ்சாவூர்: சாலையில் ஹெல்மெட் அணிந்து சென்ற 20 பெண்களுக்கு கூலி படத்துக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கிய தொண்டு நிறுவனம்.

1 More update

Next Story