மல்யுத்த போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன்; கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு


மல்யுத்த போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன்; கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு
x
தினத்தந்தி 6 Feb 2022 3:56 PM IST (Updated: 6 Feb 2022 3:56 PM IST)
t-max-icont-min-icon

மல்யுத்த போட்டியில் சென்னை போலீஸ் அணி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழக போலீஸ் மண்டலங்களுக்கு இடையே மல்யுத்த சாம்பியன் விளையாட்டு போட்டி கடந்த மாதம் 28, 29 ஆகிய 2 நாட்கள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. குத்துச்சண்டை, எடை தூக்குதல் உள்பட 6 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் 46 தங்க பதக்கங்கள், 25 வெள்ளி பதக்கங்கள், 17 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 88 பதக்கங்களை பெற்று 322 புள்ளிகளுடன் சென்னை போலீஸ் விளையாட்டு அணி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

இந்த நிலையில் சென்னை போலீஸ் விளையாட்டு அணியினரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து வெகுவாக பாராட்டினார். அவருடன், அணியினர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


Next Story