அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 74 வேட்பு மனுக்கள் ஏற்பு
அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 74 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 4,271 ஆண் வாக்காளர்களும், 4,589 பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 8,861 வாக்காளர்கள் உள்ளனர்.
வரும் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அலுவலருமான டி.ஜி.எழிலரசன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், தோட்டக்கலை துறை உதவி அலுவலர்களுமான சிட்டிபாபு, ஏழுமலை ஆகியோரிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில், மொத்தம் 76 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனையில் 2 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 74 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாளை(திங்கட்கிழமை) வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story